ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

ADVERTISEMENTS

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய ஆபுத்திரன்
திறம் அணி இழை! கேளாய் வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் ஆரண உவாத்தி
அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து கொண்டோற்
பிழைத்த தண்டம் அஞ்சி தென் திசைக் குமரி ஆடி வருவோள் சூல் முதிர்
பருவத்து துஞ்சு இருள் இயவிடை ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி தோன்றாத்
துடவையின் இட்டனள் நீங்க
13-010
ADVERTISEMENTS

தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு
அதன் துயர் தீர நாவான் நக்கி நன் பால் ஊட்டி போகாது எழு நாள்
புறங்காத்து ஓம்ப வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் இயவிடை வருவோன்
இளம்பூதி என்போன் குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு
கண்ணீர் உகுத்து ஆங்கு !ஆ மகன் அல்லன் என் மகன்! என்றே காதலி தன்னொடு
கைதொழுது எடுத்து
13-020
ADVERTISEMENTS

!நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!! என தம் பதிப் பெயர்ந்து தமரொடும்
கூடி மார்பிடை முந்நூல் வனையாமுன்னர் நாவிடை நல் நூல் நன்கனம்
நவிற்றி ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் நாத் தொலைவு இன்றி
நன்கனம் அறிந்த பின் அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்
ஆங்குப் புலை சூழ் வேள்வியில் குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்
13-030

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்று
ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு நெஞ்சு நடுக்குற்று
நெடுங் கணீர் உகுத்து !கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட நள் இருள்
கொண்டு நடக்குவன்! என்னும் உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன் கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்
13-040

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி !ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய நீ
மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச் சிறு மகனே! போக்கப்படுதி! என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர்
உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக் காட்டிடை
நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
!நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
13-050

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து நெடு நில மருங்கின் மக்கட்கு
எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால் அறம் தரு
நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை முது மறை
அந்தணிர்! முன்னியது உரைமோ?! !பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய அரு மறை நல் நூல் அறியாது
இகழ்ந்தனை தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்
13-060

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் நீ மகன் அல்லாய் கேள்! என இகழ்தலும்
!ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி புலி மகன் விரிஞ்சி புரையோர்
போற்றும் நரி மகன் அல்லனோ கேசகம்பளன் ஈங்கு இவர் நும் குலத்து இருடி
கணங்கள் என்று ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் ஆவொடு
வந்த அழி குலம் உண்டோ நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?! என ஆங்கு
அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
13-070

!ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்! என !நடவை வருத்தமொடு நல்கூர்
மேனியள் வடமொழியாட்டி மறை முறை எய்தி குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை 'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?'
என மா மறையாட்டி வரு திறம் உரைக்கும் 'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின்
ஒழுகி
13-080

காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் எறி பயம் உடைமையின் இரியல்
மாக்களொடு தெற்கண் குமரி ஆடிய வருவேன் பொன் தேர்ச் செழியன் கொற்கை
அம் பேர் ஊர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக்கு
இரங்கேனாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் செல் கதி உண்டோ
தீவினையேற்கு?' என்று அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
13-090

புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்! என ஆபுத்திரன் பின்பு அமர் நகை
செய்து !மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ முது மறை முதல்வன்
முன்னர்த் தோன்றிய கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் அரு மறை முதல்வர்
அந்தணர் இருவரும் புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ? சாலிக்கு உண்டோ
தவறு?' என உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப !ஓதல் அந்தணர்க்கு
ஒவ்வான்! என்றே
13-100

தாதை பூதியும் தன் மனை கடிதர !ஆ கவர் கள்வன்! என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட மிக்க செல்வத்து விளங்கியோர்
வாழும் தக்கண மதுரை தான் சென்று எய்தி சிந்தா விளக்கின் செழுங் கலை
நியமத்து அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்து அத்
தக்கணப் பேர் ஊர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி மை அறு சிறப்பின்
மனைதொறும் மறுகி
13-110

'காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி
நடுக்குற்றோர் யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி உண்டு ஒழி
மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து கண்படைகொள்ளும் காவலன் தான் என்
13-115