ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

4. பளிக்கறை புக்ககாதை

ADVERTISEMENTS

4. பளிக்கறை புக்ககாதை
'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு இருள்
வளைப்புண்ட மருள் படு பூம்பொழில் குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய வெயில் நுழைபு அறியா குயில் நுழை
பொதும்பர் மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்! மாசு அறத் தௌிந்த
மணி நீர் இலஞ்சி பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று ஒரு தனி
ஓங்கிய விரை மலர்த் தாமரை அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப
04-010
ADVERTISEMENTS

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்! இயங்கு தேர் வீதி எழு துகள்
சேர்ந்து வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் விரை மலர்த்
தாமரை கரை நின்று ஓங்கிய கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த வால்
வெண் சுண்ணம் ஆடியது இது காண்! மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்
04-020
ADVERTISEMENTS

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு
ஆங்கு எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி மறிந்து நீங்கும்
மணிச் சிரல் காண்!' எனப் பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட மணிமேகலை
அம் மலர்வனம் காண்புழி மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன்
உரு கெழு மீது ஊர் மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய கூம்பு முதல்
முறிய வீங்கு பிணி அவிழ்ந்து
04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு இதை சிதைந்து ஆர்ப்ப திரை
பொரு முந்நீர் இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த
வங்கம் போல காழோர் கையற மேலோர் இன்றி பாகின் பிளவையின் பணை முகம்
துடைத்து கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும்
பெருங் கலக்குறுத்து ஆங்கு இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர் ஒரு பால்
படாஅது ஒரு வழித் தங்காது
04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக் காலவேகம் களி மயக்குற்றென விடு
பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி கடுங்கண் யானையின் கடாத் திறம்
அடக்கி அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன் மணித் தேர்க்
கொடுஞ்சி கையான் பற்றி கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி வீதி மருங்கு இயன்ற பூ அணைப்
பள்ளி தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்! யாது நீ உற்ற இடுக்கண்!'
என்றலும்
04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு பாங்கில் சென்று தான் தொழுது
ஏத்தி மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு எட்டிகுமரன் எய்தியது
உரைப்போன் 'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகை நலம் வாடி மலர்
வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு கோவலன் உற்ற கொடுந் துயர்
தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி வெம் பகை நரம்பின் என் கைச்
செலுத்தியது
04-070

இது யான் உற்ற இடும்பை' என்றலும் மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு
எய்தி 'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி ஈங்கு யான் வருவேன்'
என்று அவற்கு உரைத்து ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாட
வீதியில் மணித் தேர் கடைஇ கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் !சித்திராபதியோடு உதயகுமரன்
உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்! என
04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை! ஈங்கு என் செவிமுதல் இசைத்தது
என் செய்கு?' என அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் சுதமதி
கேட்டுத் துளக்குறு மயில் போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ ஆங்கு அது தனக்கு ஓர் ஐ
விலின் கிடக்கை நீங்காது நின்ற நேர் இழை தன்னை
04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி பல் மலர்ப் பூம்பொழில் பகல்
முளைத்தது போல் பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்
கண் பரப்பினன் வரூஉம் அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி
நின்றாய்! உன் திறம் அறிந்தேன் வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ? விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?
04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி வெங் கணை நெடு வேள் வியப்பு
உரைக்கும்கொல்? மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை தானே தமியள் இங்கு
எய்தியது உரை? எனப் பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி மது
மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும் 'இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு
காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறி வளை
மகளிர் செப்பலும் உண்டோ?
04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினை விளங்கு தடக் கை விறலோய்!
கேட்டி வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது புனைவன நீங்கின் புலால்
புறத்திடுவது மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை பற்றின்
பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள்
யாக்கை இது என உணர்ந்து
04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்' என்று அவள் உரைத்த இசை படு தீம்
சொல் சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் பளிங்கு புறத்து எறிந்த பவளப்
பாவையின் இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்
04-125